பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிறு விரதம்!

 

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிறு விரதம்!

ஒரு ஊரில் பாட்டி ஒருவர் அதிகாலை குளித்துவிட்டு பசு சாணத்தால் பூஜை அறையை மொழுகி சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடம் பசு இல்லாததால் பக்கத்து வீட்டிலிருந்து சாணத்தை எடுத்து கொள்வார். ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் சாணம் தர மறுக்கவே சோகமான மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சூரிய பகவான் அந்த மூதாட்டிக்கு பசு ஒன்றை அளித்தார்.

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிறு விரதம்!

அந்த பசு தங்க சாணம் இட்டு வந்தது . இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் இந்த விவரத்தை அந்நாட்டு மன்னனிடம் சொல்ல மன்னன் தனது ஆட்களை அனுப்பி மூதாட்டியும், பசுவையும் பிடித்து வரச் சொன்னார் . பிறகு மூதாட்டியை விரட்டிவிட்டு பசுவை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அன்று இரவு சூரியன் மன்னனின் கனவில் தோன்றி மூதாட்டியிடம் பசுவை ஒப்படைக்காவிட்டால் சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவேன் என்று கூறினாராம். இதையடுத்து அந்நாட்டு மன்னன் பாட்டியின் வீட்டுக்கு தானே நேரில் சென்று அந்த பசு மாட்டை கொடுத்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து தன்னை எதிர்க்கும் ஒருவன் அரசனாக இருந்தாலும் சூரியனை வணங்கி விரதம் இருந்து வழிபட்டால் நம் எதிரிகளை நாம் எளிதில் வீழ்த்தி விடலாம் என்பது தெரியவருகிறது.

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிறு விரதம்!

காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளிக்க வேண்டும். பிறகு பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு, ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி, குங்குமம் ,சிவப்பு நிற மலர்கள் பழம் வைத்து கொள்ள வேண்டும் . பிறகு விளக்கை ஏற்றி சூரியன் உதிக்கும் திசை நோக்கி அதை வைத்து விட வேண்டும். ஒரு சிறிய சொம்பில் தண்ணீர் எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே அந்த அர்ச்சனை தட்டின் மீது தீர்த்தம் போல தெளித்து விட வேண்டும்.

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிறு விரதம்!

பூஜை முடிந்ததும் ஏதேனும் ஒரு இனிப்பு வகையை சாப்பிடலாம் . அதன் பிறகு மாலை வரை தண்ணீர் அல்லது பால் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நன்கு சாப்பிட்டுவிட்டு , இரவு சாப்பிடலாம் இருங்கள். அடுத்த நாள் காலை சூரிய உதயத்திற்கு பின்னர் தான் சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சாப்பிட மறந்து விட்டால் அன்றைய நாள் முழுக்க நீங்கள் சாப்பிடக்கூடாது. மறுநாள் சூரியன் தோன்றிய பிறகு தான் சாப்பிட வேண்டும். இவ்வாறு சூரிய பகவானை வழிப்பட்டால் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.