உடலின் ஆக்சிஜன் அளவை அறிய பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை உபயோகிப்பது எப்படி? நடிகை பூஜா ஹெக்டே வீடியோ!

 

உடலின் ஆக்சிஜன் அளவை அறிய பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை உபயோகிப்பது எப்படி? நடிகை பூஜா ஹெக்டே வீடியோ!

தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, தற்போது விஜய்யுடன் ‘தளபதி 65’ படத்தில் இணைந்துள்ளார். இதனிடையே நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் தேதி நடிகை பூஜா ஹெக்டே இதை உறுதிப்படுத்தினார். இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

உடலின் ஆக்சிஜன் அளவை அறிய பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை உபயோகிப்பது எப்படி? நடிகை பூஜா ஹெக்டே வீடியோ!

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட போது, ​​எனது ஆக்சிஜன் அளவை உன்னிப்பாக கவனிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. என் மருத்துவர் என்னிடம் இதை சொல்லும் வரை எனக்கு இதை பற்றி தெரியாது. தற்போது நான் சொல்லும் இந்த விஷயம் உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நோயை எதிர்த்துப் போராடுவது சாதாரணமானது அல்ல. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒற்றை பதிவிட்டுள்ளார். அதில் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்பாடு குறித்து கூறியுள்ளார்.

“கொரோனா காரணமாக வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தவாறே, பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு கொண்டு உங்கள் ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ளலாம்.வலது கை ஆள்காட்டி விரல் அல்லது பெருவிரலில் பல்ஸ் ஆக்சிமீட்டர் பொருத்தி பார்க்கலாம்.முதலில் விரலில் நக பாலிஷ், ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . அப்படி இருந்தால் ஆக்சிஜன் அளவு குறைவாக காட்டும். 95% முதல் 100% வரை இருப்பது இயல்பு. 94% கீழே இருந்தால் மீண்டும் விரலை மாற்றி பயன்படுத்தி பாருங்கள். அப்போதும் அதே அளவு இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.