பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் புகைப்படங்களுக்கு மாற்றுவது எப்படி?

 

பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் புகைப்படங்களுக்கு மாற்றுவது எப்படி?

ஃபேஸ்புக்கிலிருந்து வேறு எந்த தளத்திற்கும் புகைப்படங்களை அப்லோடு  செய்வது ஒரு குழப்பமான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது புகைப்படங்களை பேஸ்புக்கிலிருந்து கூகிள் போட்டோஸ் தளத்திற்கு அப்லோடு செய்வது எளிதாகியுள்ளது. டேட்டா பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்போது புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் தளத்திற்கு அப்லோடு செய்ய அனுமதிக்கும் ஒரு டூலை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த புகைப்பட பரிமாற்ற கருவி கடந்தாண்டு அயர்லாந்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விரிவாக்கப்பட்டது. பேஸ்புக் மற்றும் கூகிள் கணக்கு கொண்ட எவரும் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே பார்க்கலாம்!

பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் புகைப்படங்களுக்கு மாற்றுவது எப்படி?

1)பேஸ்புக் டெஸ்க்டாப் இணையதளத்தை விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து செல்ல வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள செட்டிங்ஸ்-பிரைவசி பகுதிக்கு செல்ல வேண்டும்.

2)இடதுபுறம் உள்ள மெனுவில் யுவர் பேஸ்புக் இன்பர்மேஷன் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.

3)புகைப்படம் மற்றும் வீடியோவை பரிமாற்ற கோரும் பகுதியை க்ளிக் செய்து வியூ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4)டிராப்டவுன் மெனுவில் உள்ள கூகுள் போட்டோஸ் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.

5)பரிமாற்ற கோரிக்கையை உறுதி செய்த பிறகு கூகுள் போட்டோஸ் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும்.