முதுகு வலியா? – வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

 

முதுகு வலியா? – வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கிறோம், நாள் முழுக்க பைக்கில் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இதனால், இளம் வயதிலேயே முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வருகின்றன. முதுகெலும்பு உறுதியாக, முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்க தினமும் வீட்டில் செய்யக் கூடிய உடற்பயிற்சிகளை இங்கே காணலாம்.

முதுகு வலியா? – வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

கேட் அன்ட் மேல் எக்சர்சைஸ்:

பூனை மற்றும் ஒட்டகம் போல நம்முடைய முதுகெலும்பை உயர்த்தி இறக்குவதுதான். இதற்கு முதலில் தரையில் முட்டிப் போட்டு இரு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை இழுத்தபடி முதுகெலும்பை ஒட்டகம் முதுகு போல மேலே உயர்த்த வேண்டும். சில விநாடிகள் இதே நிலையிலிருந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

இப்படி செய்வதால் முதுகெலும்பு வலுப்படும். முதுகுவலி குறைவதை உணரலாம். நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் வளைந்த முதுகெலும்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலி முற்றிலும் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

முதுகு வலியா? – வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

சூப்பர் மேன் வொர்க் அவுட்

தரையில் குப்புற படுக்க வேண்டும். கையை தலைக்கு மேல் நீட்டி தரையில் பதிக்க வேண்டும். இப்போது கை, மேல் உடல், கால் பகுதி என அனைத்தையும் உயர்த்த வேண்டும். உடல் முழுவதும் வயிற்றுப் பகுதியில் தாங்கிய நிலையில் இருக்கும். இரண்டு விநாடிகள் அப்படி இருந்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதே போல 10 முறை செய்யலாம்.

இப்படி செய்யும் போது நரம்புகள் புத்துணர்வு வெறும். நரம்பு வலுப் பெறும். இடுப்பு பகுதி பலம் பெறும். முதுகு வலி குறையும்.

முதுகு வலியா? – வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

பெல்விக் பிரிஜ்

இடுப்பெலும்பைப் பாலம் போல உயர்த்துவது பெல்விக் பிரிஜ் பயிற்சியாகும். தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தரையை பார்த்தபடி பதித்துக்கொள்ள வேண்டும். காலை மடக்கி பாதங்களைத் தரையில் பதிக்க வேண்டும். இப்போது இடுப்பைக் கால் மூட்டி வரை நேராக உயர்த்தி ஒரு சில விநாடிகள் கழித்து இறக்க வேண்டும். இதே போல் 10 முதல் 15 முறை செய்யலாம்.

இப்படி செய்வதன் மூலம் பக்கவாட்டு தசைகள், கொழுப்பு கரையும். முதுகெலும்பு உறுதியாகும். முழு உடலும் ஓய்வு பெறும். முதுகுவலி குறையும்.