வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பது எப்படி? ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை

 

வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பது எப்படி?  ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்தது.

வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பது எப்படி?  ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை

ஆனால் தற்போது தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதாகவும் அவை பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கேரள வேளாண்துறை அளித்த தகவலின் படி, படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளி வகையை சேர்ந்தது இல்லை என்றும் இதனால் பயிர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் இருப்பதால், அதன் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை பாதுகாப்பது தொடர்பாக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.