“ஸ்கூல் எப்ப திறப்பாங்க ,சோறு எப்ப போடுவாங்க?”-பள்ளிகள் மூடியதால் பட்டினி கிடக்கும் குழந்தைகள் ..

“ஸ்கூல் எப்ப திறப்பாங்க ,சோறு எப்ப போடுவாங்க?”-பள்ளிகள் மூடியதால் பட்டினி கிடக்கும் குழந்தைகள் ..

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன் லைனில் பணம் கட்டி படிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மத்தியில் ,பள்ளியில் கிடைத்த மதிய சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்து பிச்சை எடுக்கும் ஏழை குழந்தைகள் பீகாரில் உள்ளார்கள்.

“ஸ்கூல் எப்ப திறப்பாங்க ,சோறு எப்ப போடுவாங்க?”-பள்ளிகள் மூடியதால் பட்டினி கிடக்கும் குழந்தைகள் ..

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின் பட்பில்லா கிராமத்தில் உள்ள முசாஹரி டோலாவைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளனர் .அவர்களில் பலரும் பழைய பேப்பர் பொறுக்கும் வேலையும் ,சிலர் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைக்கு வந்துள்ளனர் .
அந்த ஊரில் பல குழந்தைகள் பள்ளியில் போடப்படும் மதிய உணவுக்காகத்தான் பள்ளிக்கே போகிறார்கள் .பள்ளியில் மதிய உணவில் சோறு ,பருப்பு ,சோயா ,முட்டை போன்ற உணவுகள் கிடைத்து வந்ததால் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ,இப்போது பள்ளிகள் மூடப்பட்டதால் ஒரு வேலை உணவுக்கே மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறினர் .மேலும் வெள்ளிக்கிழமை வந்தால் 100 சதவீதம் அனைவரும் பள்ளிக்கு போவோம் ,ஏனென்றால் அன்று எங்களுக்கு முட்டை போடுவார்கள் என்றும் கூறினர்.அதனால் பள்ளி திறக்கும் நாளை ஆவலாக எதிர்பார்ப்பதாக அவர்களின் பெற்றோர்கள் கூறினார்கள் .

“ஸ்கூல் எப்ப திறப்பாங்க ,சோறு எப்ப போடுவாங்க?”-பள்ளிகள் மூடியதால் பட்டினி கிடக்கும் குழந்தைகள் ..
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது ,பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து மதிய உணவுக்கு பதிலாக குழந்தைகளின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதாக மூத்த மாவட்ட அதிகாரிகள் கூறினர்.இது எந்த அளவு உண்மையென்பது தெரியவில்லை .