9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

 

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு, பட்ஜெட் மீதான விவாதங்கள் 25,26ம் தேதிகளில் நடைபெறும் எனசபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன் படி, இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. அவையின் தொடக்கத்தின் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

இதன் பிறகு அவையில் தனது உரையைத் தொடங்கிய முதல்வர் பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று பொதுத் தேர்வின்றி 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ். கடந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வின் எஞ்சியிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதே போல, பிற மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதால் அந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை அரசு விரிவாக வெளியிடும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

கடந்த முறை மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதைப் போலவே, இந்த முறையும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.