கல்வி மற்றும் தொழிலில் விருத்தியடைய பூஜை எப்படி செய்யலாம்!

 

கல்வி மற்றும் தொழிலில் விருத்தியடைய பூஜை எப்படி செய்யலாம்!

செய்யும் தொழிலே தெய்வம். அந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை தெய்வமாக போற்றும் விதமாக, அவற்றையும் தெய்வமாக பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையாகும். இந்நாளே மகாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்தியின் ஒன்பதாவது நாளான்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கல்வி மற்றும் தொழிலில் விருத்தியடைய பூஜை எப்படி செய்யலாம்!

ஆயுத பூஜையன்று வீடு, வாசல் நிலைகதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து தூய்மைபடுத்தி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜை அறையின் முன்னதாக, ஒரு டேபிள் வைத்து அதன் மேல் வெள்ளைத்துணி அல்லது நியூஸ் பேப்பர் போட்டு, அதன் மீது புத்தகங்கள், பேனாக்கள், பணப்பெட்டி போன்றவற்றை வைத்து அவற்றிற்கு பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு டேபிளில் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை கழுவி சுத்தப்படுத்தி வைத்து அவற்றையும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மாடு கன்றுகளையும், அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். இதேபோல தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களையும் அலங்கரிக்கவும். பின்னர், இவற்றிற்கு பூஜை செய்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஐப்பசி 09ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7.42 மணிவரை பிற்பகல் பகல் 2.14 மணி முற்பகல் 04.23 மணிவரை பூஜை செய்யலாம். இரவு 09.14 மணி முதல் 12.14 மணி வரை பூஜை செய்யலாம். இந்த நேரத்தில் பூஜையை செய்யமால் இருப்பது நல்லது.

ஞாயிறு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம்
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இராகு காலம். இரவு 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்
இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.

கல்வி மற்றும் தொழிலில் விருத்தியடைய பூஜை எப்படி செய்யலாம்!

ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் சாமந்தி பூ மிகவும் குறிப்பிடத்தக்க மலர். எனவே, அன்றைய தினம் அந்த மலர் கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். பூஜைக்கு முன்பு, முழுமுதற்கடவுளான பிள்ளையாரை மஞ்சள் பொடியில் அல்லது பசுசாணத்தில் பிடித்துவைத்து அருகம்புல்லினால் ‘ஓம் கணபதயே நமஹ’ என்று அர்ச்சனை செய்து தூபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும். எங்களின் படிப்பு தொழி்ல் வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதியையும் விநாயகரையும் வேண்டிக்கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் “ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ” என்று அர்ச்சித்து,

ஆயுத பூஜை மந்திரம்
‘ஜெயதே வரதே தேவி தஷ்மயம்பராஜிதே’. தரயாமி பூஜே தக்ஷா ஜெயலாபபவித்தியே. ‘ பூஜித்து வணங்க வேண்டும்.

-வித்யா ராஜா