சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் கிரியாட்டினின்… கட்டுப்படுத்துவது எப்படி?

 

சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் கிரியாட்டினின்… கட்டுப்படுத்துவது எப்படி?

நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் புரதத்தை பயன்படுத்துவதால் உருவாகும் உபபொருள்தான் கிரியாட்டின். ஆரோக்கியமான சிறுநீரகம் இந்த கிரியாட்டினை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். கிரியாட்டினின் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் அதை சிறுநீரக செயலிழப்பு என்று சொல்கிறார்கள். உடலில் கிரியாட்டினின் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் கிரியாட்டினின்… கட்டுப்படுத்துவது எப்படி?

பொதுவாக ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dLஎன்ற அளவிலும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL என்ற அளவிலும், இளம் வயதினருக்கு 0.5 முதல் 1.0 mg/dL என்ற அளவிலும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL என்ற அளவிலும் கிரியாட்டினின் அளவு இருக்கலாம். இதைத் தாண்டினால் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அவர்கள் கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த புரதச்சத்து மிக்க உணவைக் குறைத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயக்க புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கக் கூடியவை. இவை கிரியாட்டினின் உருவாவதைக் கட்டுப்படுத்தி வெளியேற்ற உதவுகின்றன. தொடர்ந்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து வருவது கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, பயிறு வகைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் கூட கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். நீரிழப்பு, குறைவான அளவில் தண்ணீர் அருந்துவது உடலில் கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும். இதை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகங்கள் திணறும். சிறுநீரக செயலிழப்பால் அவதியுறுபவர்கள் டாக்டர் பாிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். மற்றவர்கள் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.

உப்பு அளவைக் குறைப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிக அளவில் உள்ளன. குறிப்பாக உப்பில் உள்ள சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, கிரியாட்டினின் உற்பத்தியைக் குறைக்க நினைப்பவர்கள் உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது.

சிகரெட் பழக்கம், மது பழக்கம் போன்றவை கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும். சிறுநீரக பிரச்னை வரக்கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் சிகரெட், புகையிலை, மது பழக்கத்துக்கு குட்பை சொல்லிவிடுங்கள்!