கொரோனா காலத்தில் ‘பாதுகாப்பாக’ உடலுறவு வைத்து கொள்வது எப்படி?

 

கொரோனா காலத்தில் ‘பாதுகாப்பாக’ உடலுறவு வைத்து கொள்வது எப்படி?

கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு, இரவு நேர ஊரடங்கு என பழைய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளோம். வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது என கொரோனா தொற்று நெருக்கடிக்கு பிறகு வாழ்க்கை முறை மாறிவிட்டது. இது பாலியல் உறவுக்கும் பொருந்தும்.கொரோனா காலகட்டத்தில் நம்மை பாதுகாத்து கொள்ள நமது பாலியல் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தி கொள்ள பொதுமக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கொரோனா காலத்தில் ‘பாதுகாப்பாக’ உடலுறவு வைத்து கொள்வது எப்படி?

முதலில் உங்கள் வாழ்க்கை துணையின் அனுமதியை பெறவேண்டும். நீங்கள் அவர்களை கைகளை பிடிக்கவோ, கட்டியணைக்கவோ ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றாலும் கூட ஒப்புதல் என்பது மிக முக்கியமானது. தொற்றுநோய்க்கு முந்தையதை விட அதிகமாக இதில் கவனம் செலுத்துதல் வேண்டும். நம்மை யாரும் தொடும் போதும், நெருங்கும் போதும் அச்சம் இருக்கும். எனவே, உங்கள் மனதில் என்ன இருக்கிறது? அதற்கு உங்கள் வாழ்க்கை துணை சம்மதம் உண்டா என்பதை கலந்துரையாடி உறுதிசெய்து, கொள்வது நல்லது.

கொரோனா காலத்தில் ‘பாதுகாப்பாக’ உடலுறவு வைத்து கொள்வது எப்படி?

உங்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் குறைந்த அளவில் இருந்தாலே உடனேபரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உங்கள் துணையுடன் நேர்மையாக தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஒருவருடன் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்டால், வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு நீங்கள் உடலுறவு, முத்தம் உள்ளிட்ட சமிக்ஞைகளில் ஈடுபடலாம்.கொரோனா காலத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில்லை.ஆனால் நீங்கள் வெளிநபர்களுடன் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அத்துடன் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

கொரோனா காலத்தில் ‘பாதுகாப்பாக’ உடலுறவு வைத்து கொள்வது எப்படி?

நீங்களும் உங்கள் இணையும் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. அதை விடுத்து வெளியே சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.அத்துடன் பாலியல் உறவின் போது விந்தணுக்களிலும் வைரஸ் இருக்கும் என்பதால் ஆணுறை பயன்படுத்துவது அவசியம். இதையெல்லாம் தாண்டி சுயஇன்பம், செக்ஸ் டாய்ஸ் , இணையம் அல்லது செல்போன் மூலம் உங்கள் துணையுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது கொரோனா காலத்தில் கூடுதல் பாதுகாப்பானதுஎன்றும் கூறப்படுகிறது.