தண்ணீரை இப்படி குடிச்சா ,உங்க வாழ்க்கையில் கண்ணீரே விடாமல் வாழலாம்

 

தண்ணீரை இப்படி குடிச்சா ,உங்க வாழ்க்கையில் கண்ணீரே விடாமல்  வாழலாம்

உடலில் கிட்டத்தட்ட 70% நீர்தான் உள்ளது. உடலுக்குள் இருக்கும் நீரின் தன்மைக்கும், அந்த மனிதருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நம் நாட்டில், நம் முன்னோர்கள், எப்போதுமே நீரின் தூய்மையையும், மேம்பட்ட சக்தியையும் பராமரிப்பதற்காக, குடிக்கும் நீரின் மேல் அதிக கவனம் செலுத்துவதற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்

மனிதன் ஆரோக்கியமாக வாழ நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துசெல்லவும், உடலின் வெப்பநிலையை சீராக்கவும், செரிமானத்தை தூண்டவும் நீர் கண்டிப்பாக தேவை. உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுவதில் நீரின் பங்கு இன்றியமையாதது.

உண்ணும் உணவிலிருந்து உடலுக்கு தேவையான நீரின் அளவு குறிப்பிட்ட சதவீதம் செல்கிறது. எனி னும் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால் நீர் வறட்சி டீ ஹைட்ரேட் பிரச்சனைக்கு வழிவகுக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாகம் இல்லை என்று சொல்பவர்கள் கூட கண்டிப்பாக 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் ஆரோக்கிய மானது ஆனால் தினமும் இந்த நேரத்தில் குடித்தால் தான் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.

தண்ணீரை இப்படி குடிச்சா ,உங்க வாழ்க்கையில் கண்ணீரே விடாமல்  வாழலாம்

முந்தைய தினம் இரவு முழுவதும் ஒரு செம்புப் பாத்திரத்தில் நீரை வைத்திருந்தால், அது அந்நீர் மிகவும் தூய்மையடைய வழி வகுக்கிறது. இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், சக்தி நிலைக்கும் அந்த நீர் நன்மை பயக்கிறது.

சுத்தமான தண்ணீர்…

நீங்கள் குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு அதை ஆற விடுவதுதான் பாதுகாப்பானது.

அது வெதுவெதுப்பானவுடன், ஒரு மண் பானையில் ஊற்றி வையுங்கள்.

தண்ணீரில் சிறிது சீரகம் போட்டு கொதிக்க வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைக்கலாம்.

மண்பானையில் பூச்சிகள், தூசி மற்றும் இதர குப்பைகள் விழாமலிருக்க, எப்போதும் பானையை மூடி வைக்கவும்.

உங்களுக்கு தாகமெடுக்கும்போது தாகம் தணிகின்ற அளவு நீரை குடிப்பதுடன் மேலும் சிறிது கூடுதலாக நீரைக் குடிக்க வேண்டும். அந்த அதிகப்படியான நீர் உங்கள் உடல் உறுப்புகள் சுத்தமாவதற்கு உதவும். உங்கள் உடலில் போதுமான நீர் இருக்குமளவு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் தண்ணீர் வற்றிவிட்டாலோ அதிகமானாலோ, மூளையில் சோடியத்தின் அளவு மாறுபட்டு குறைந்து, மூளை வீக்கம் ஏற்பட்டுவிடும்.

கோடை காலங்களில்…

கோடை காலத்தில், கொதிக்க வைத்த நீருடன், தாது உப்புக்கள் நிறைந்துள்ள இளநீரைப் பருகுங்கள்.

பகல் நேரத்தில் பழச்சாறுகளை அருந்தலாம்.

பூசணி ஜூஸ் குளிர்ச்சியளித்து, அமைதிபடுத்தி, சக்தியூட்டும் தன்மை வாய்ந்தது.

கோடை காலங்களில் அருந்துவதற்கு உகந்தது.

குளிர்காலத்திலும் இதை அருந்தலாம் என்றாலும், அதில் சிறிது தேனோ அல்லது கருமிளகுத் தூளோ கலந்து அருந்தினால், அதன் குளிர்ச்சித் தன்மையை குறைக்க முடியும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு தம்ளர் நீர் குடிப்பது மிகவும் நல்லது. அதிகப்படியான உணவு எடுத்துகொள்வதை இது தடுக்கிறது. ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்பும் இருக்கும் இடை வெளியில் காய்ந்திருக்கும் வயிற்றை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. நாக்கின் சுவை அரும்புக ளை புதுப்பிக்க உதவுகிறது.

குறிப்பாக உடல் பருமன் அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதிகப்படியான உணவு எடுப்பதை தவிர்க்க உதவுகிறது இந்த உணவுக்கு முன்பான ஒரு தம்ளர் நீர்.