ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!

 

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!

கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து அனைத்தும் ஆன்லைன் வசம் மாறிவிட்டது. திருமண ரிசப்ஷன் முதல் ஆபீஸ் மீட்டிங் வரை எல்லாமே ஆன்லைன் தான். கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்த படியே பணிபுரிய ஊக்குவிக்கின்றன. அலுவலகம் தொடர்பான அனைத்து மீட்டிங்கும் ஜூம் வீடியோ கால் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீடியோ காலில் நம்மை எப்படி அழகாக காட்டிக் கொள்வது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!
  1. சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது:

வீடியோ காலின் போது மந்தமான நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட சுவருக்கு முன் உட்கார்ந்தால் நீலம், சிவப்பு, பச்சை உள்ளிட்ட பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும். நீங்கள் பிரகாசமான வர்ணம் பூசப்பட்ட சுவருக்கு முன் அமர்ந்தால் பிங்க், மஞ்சள், ஊதா உள்ளிட்ட பேஸ்டல் நிறங்களில் உடையணிய வேண்டும்.

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!
  1. உடையின் கழுத்து:

வீடியோ காலில் உங்கள் உடலின் மேல் பகுதி மட்டுமே தெரியும் என்பதால், உடையின் கழுத்து பகுதியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உயர் கழுத்து கொண்ட சட்டையோ அல்லது வட்ட வடிவ கழுத்துக் கொண்ட சட்டியோ உங்களின் நம்பிக்கையை தளரச் செய்யலாம். அதனால், பெரும்பாலும் காலர் உடன் இருக்கும் சட்டையை தேர்வு செய்யுங்கள். அல்லது V-neck சட்டையையோ அல்லது டீ ஷர்ட்டோ அணிவது சிறந்தது.

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!
  1. அடுக்கடுக்கான உடை:

அடுக்கடுக்கான துணியை போடுவது எப்போதுமே ஒரு சிறந்த வழியாக இருக்கும். அதனால் தான், நேர்காணல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் எப்போதுமே ஃபார்மலாக பிளேஸர்களை அணிந்துச் செல்கிறார்கள். ஜூம் நேர்காணலுக்கும் இதே முறையை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அணிவதற்கு தேர்வு செய்யும் ஒரு ஆடையின் மேல் ஒரு நல்ல பிளேஸர் அல்லது சாதாரண ஜாக்கெட் அணியலாம்.

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!
  1. நிற வேறுபாடு:

உங்கள் முடியின் நிறம் கருப்பாக இருந்தால், அதே கருப்பு நிற உடையை அணியாதீர்கள். அதற்கு எதிர்மறையான நிற உடைகளை அணிவது சிறந்தது. அவ்வாறு ஒரே நிறத்தை தேர்வு செய்தால், வீடியோ காலில் எதிரே இருப்பவர்களுக்கு அது குழப்பமான நிலையைக் கொடுக்கும்.

ஆன்லைன் இன்டர்வியூக்கு எப்படி உடை அணியலாம்? டிப்ஸ் இதோ!
  1. அதிக நகைகள் அணிதல் கூடாது:

ஆன்லைன் நேர்காணலுக்கு அதிகப்படியான நகைகள் தேவையில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு சாதாரண கம்மல், அணிந்தாலே போதுமானது. அல்லது டெயினிட்டி பெண்டண்ட் உடன் கூடிய ஒரு சாதாரண செயினை அணியுங்கள். மேலே கண்ட சில டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால், ஜூம் கால் மீட்டிங்கில் கூட உங்களை அழகாக காண்பித்துக் கொள்ள முடியும்.