துன்பங்களை அழிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

 

துன்பங்களை அழிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

இந்து மதத்தில் வளம், ஞானம் மற்றும் நல்ல எதிர்காலத்தை வழங்கும் கடவுளாக விநாயகர் விளங்குகிறார். அவரை நினைத்து சங்கடஹர சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. சங்கட என்றால் துன்பங்கள் என்று அர்த்தம், ஹர என்றால் அழித்தல்… துன்பங்களை, தடைகளை அழிக்கும் சதுர்த்தி என்று அர்த்தம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், கிருஷ்ண பட்சம் தினத்தில் சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

துன்பங்களை அழிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

இன்றைய தினம் அதிகாலை எழுந்து விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும். பிறகு காலைக்கடன் முடித்து, குளித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அறுகம்புல் மற்றும் மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். பிறகு தீபாராதனை, தூபம், நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். மாலை வரை விரதம் இருக்க வேண்டும்.

மாலையில் விநாயகர் சன்னதிக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்று, அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு சந்திரனைப் பார்த்து வழிபட வேண்டும். அனைத்தையும் முடித்த பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். முழு சாப்பாடாக இல்லாமல், எளிய உணவுகள், பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்துதான் நவ கிரகங்களுள் ஒரு கிரகமாக அங்காரகன் இடம் பெற்றார். கிருஷ்ணன், பார்வதி தேவி உள்பட பலரும் இந்த விரதத்தை இருந்துள்ளனர். சக்தியாக இருந்த போது இந்த விரதத்தை மேற்கொண்டுதான் பார்வதி தேவி சிவபெருமானை வந்தடைந்தார்.

பார்வதி தேவியே வழிகாட்டிய விரதம் இது. எனவே, இன்றைய நாளில் நாமும் விரதம் இருந்து, விநாயகர் அருளைப் பெறுவதன் மூலம் தடைகள் தகர்த்திடும். சுகபோக வாழ்வைப் பெற்றிடலாம்!

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

அர்த்தம்:

பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை வழங்கும், சங்கடங்களை நீக்கும் கணபதியே உம்மை வணங்குகிறேன்.  முழு முதற் கடவுளும், பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் ஒற்றை தந்தத்தை உடையவரே, பக்தர்களைத் துன்பத்திலிருந்து காப்பவரே, பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெற செய்பவரே, பக்தர்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி, நன்மை வழங்குபவரே உம்மை வணங்குகிறேன்!