உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்வது எப்படி?

 

உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்வது எப்படி?

நீங்கள் எப்போதாவது உடல் சோர்ந்து போய், வீக்கம் அடைந்தது போன்று உணர்ந்திருக்கின்றீர்களா? அப்படி உணர்ந்திருந்தால் உங்கள் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதன் அறிகுறிதான் அது. டீடாக்ஸ் அல்லது நச்சு வெளியேற்றம் என்று கேட்டாலே ஏதோ மூலிகை கஷாயத்தை குடிப்பது என்று பலரும் நினைத்துக்கொள்கின்றனர். உண்மையில் அது அப்படி இல்லை. டீடாக்ஸ் செய்வது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதாகும்.

உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்வது எப்படி?

நச்சுக்கள் வெளியேற்றம் என்பது அதன் உடலில் நாட்படச் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும் எளிய வழியாகும். இந்த நச்சு என்பது உடல் ரீதியாக, மனம் ரீதியாக, ஆன்மிக ரீதியாக மனதுக்குள் சேர்ந்ததாக இருக்கலாம். அது நம்மை தொந்தரவு செய்வதாக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்தி, அமைதிப்படுத்துவதன் மூலம் மனம் மற்றும் ஆன்மிக காரணங்களால் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்ற முடியும்.

நான் ஆரோக்கியமாக உள்ளேன் நானும் டீடாக்ஸ் செய்ய வேண்டுமா என்று பலரும் கேட்பார்கள். நாம் உட்கொள்ளும் உணவு, சுற்றுச் சூழல், காற்றில் உள்ள மாசு, மற்றவர்கள் புகைத்து விட்ட சிகரெட்டை சுவாசித்தது. நாமே புகையிலை, மது பழக்கம் கொண்டவர்களாக இருப்பது போன்ற காரணங்கள் காரணமாக டீடாக்ஸ் செய்வது நல்லதாகவே கருதப்படுகிறது.

டீடாக்ஸ் டிரிங்ஸ் செய்வது மிகவும் ஈஸி. அதற்குத் தேவையானவை நறுக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் தண்ணீர் அவ்வளவுதான். ஒரு லிட்டர் தண்ணீரில் விரும்பிய காய்கறி, பழங்கள், மூலிகைகளை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். ஒன்று முதல் 12 மணி நேரத்துக்குள் அந்த தண்ணீரை அருந்த வேண்டும். அவ்வளவுதான் டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்வது ஈஸி!

வெள்ளரி – புதினா, எலுமிச்சை – இஞ்சி, எலுமிச்சை – ஆரஞ்சு, தர்பூசணி – புதினா, ஸ்டிராபெர்ரி – துளசி, ஆப்பிள் – மசாலா பட்டை என நமக்கு விரும்பிய காய்கறி, பழங்கள், மூலிகைகளை சேர்த்து டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பலனை அளிக்கும்.

டீடாக்ஸ் டிரிங்க்ஸ் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றப் பணியைத் தூண்டும். இதன் காரணமாக உடல் எடை குறைப்பு எளிதாக நடக்கும். தண்ணீரில் எலுமிச்சை பழத்தை வெட்டி போட்டுக் குடிக்கலாம், ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சில துளிகள் விட்டு தண்ணீர் அருந்தலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் கொண்டு டீடாக்ஸ் டிரிங்க்ஸ் செய்து அருந்தலாம். இப்படி செய்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

எலுமிச்சை – புதினா போட்டு டீடாக்ஸ் டிரிங்க்ஸ் அருந்தும்போது அது செரிமானத்தைத் தூண்டும், கல்லீரல் செயல்திறன் அதிகரிக்க வெள்ளரிக்காயை தண்ணீரில் வெட்டி போட்டு, கொஞ்சம் வெள்ளரி சாரை அதில் இட்டு, நாள் முழுக்க அருந்த வேண்டும். இந்த இந்த காய்கறிகள், பழங்கள்தான் என்று இல்லை, விரும்பிய காய்கறிகளை தண்ணீரில் போட்டு அன்றைய தினம் முழுக்க அருந்தினால் போதும்.