விவசாயிகள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் ஐடியா கேட்ட பாஜக எம்பிக்கள்!

 

விவசாயிகள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் ஐடியா கேட்ட பாஜக எம்பிக்கள்!

விவசாயிகள் போராட்டத்தைக் கையாள்வதற்கு தன்னிடம் பாஜக எம்பிக்கள் ஆலோசனை கேட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் ஐடியா கேட்ட பாஜக எம்பிக்கள்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து 11 கட்ட பேச்சுவார்த்தையிலும் அரசுக்கும் விவசாயிகளுக்கும் உடன்பாடு எட்டவில்லை. இந்த அதிருப்தியில் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஆனால், அப்பேரணி சிலரால் வன்முறையாக மடைமாற்றப்பட்டது. இதனால் அப்பாவி விவசாயிகள் தாக்கப்பட்டனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் வாங்குவார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால் விவசாயிகளோ பின்வாங்க மாட்டோம் என்று கூறி டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் ஐடியா கேட்ட பாஜக எம்பிக்கள்!

உள்ளூர் மக்கள் போர்வையில் பாஜகவின் துணை அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களை இறக்கிவிட்டு விவசாயிகள் மசியவில்லை. இணைய சேவை நான்கு நாட்களுக்கு மேலாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், மனம் தளராமல் உறுதியுடன் போராடிவருகின்றனர். இச்சூழலில், விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னிடம் பாஜக எம்பிக்கள் ஐடியா கேட்டதாக மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பகீர் ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “விவசாயிகளின் போராட்டத்தை எப்படி கையாள்வது என்று பாஜகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள் என்னிடம் ஆலோசனை கேட்டு மெசெஜ் செய்தார்கள். நான் அவர்களுக்கு ஒரு ஐடியாவை பரிந்துரைத்துள்ளேன். அதன்படி, வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரத்தை ஒவ்வொரு மாநில அரசிடமும் கொடுக்க வேண்டும். அந்த மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் வேளாண் சட்டங்களை அமல்படுத்துங்கள் என்று மத்திய அரசிடம் கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும். அந்த மாநிலங்களில் மட்டும் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். என்னுடைய இந்தப் பரிந்துரையை அனைத்து எம்பிக்களும் ஒப்புக்கொண்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்: சுப்பிரமணியன் சுவாமியிடம் ஐடியா கேட்ட பாஜக எம்பிக்கள்!

வேளாண்மைத் துறை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் உணவுப் பொருட்கள் உற்பத்தி, வர்த்தகம், வழங்கல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை குறித்து மத்திய அரசும் மாநில அரசும் சட்டமியற்ற முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியது. சுப்பிரமணியன் சுவாமி கூறியது போல வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநில அரசு அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் சட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன. இதனால் தான் விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து போராடுகின்றனர். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் மாநில சுயாட்சிக்கும் சேர்த்தே பிரச்சினையாக அமைந்திருக்கின்றன.