கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற விரும்புபவர்கள் எவ்வாறு போலி மருத்துவர்களை தவிர்ப்பது?

 

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற விரும்புபவர்கள் எவ்வாறு போலி மருத்துவர்களை தவிர்ப்பது?

கொரோனா நோய்த் தொற்று உலகளவில் பெரும் அச்சமாக மாறியுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை முறையான தடுப்பூசி அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாட்டு மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்னொரு பக்கம் இயற்கை மருத்துவம் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று பல சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களில் முறையான தேர்ச்சி மற்றும் பயிற்சி பெறாத போலி மருத்துவர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே போலி இயற்கை மருத்துவ மருத்துவரை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற விரும்புபவர்கள் எவ்வாறு போலி மருத்துவர்களை தவிர்ப்பது?

அதன்படி இந்திய மருத்துவ முறையின் கீழ் சிகிச்சைப் பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் ஆகியவற்றில் பதிவு பெற்ற மருத்துவர்களா என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் அவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவம் போன்ற பெயர்களில் எந்த பதிவும் செய்யாமல் அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்கள் நிறைய பேர் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.

அத்தகைய போலி மருத்துவர்களை கண்டறிய மருத்துவருடைய பெயர், மருத்துவக் கல்வித் தகுதி, பதிவு எண் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். அத்துடன் www.tngmc.com, tnsmc1998@gmail.com, tnbim1983@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வாயிலாகவும் மற்றும் 044-26190246 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ள மருத்துவர்களின் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.