ஈசிஜி எடுக்காமலே உங்க இதயம் இரும்பு மாதிரி இருக்கான்னு இதை படிச்சி தெரிஞ்சிக்கோங்க

 

ஈசிஜி எடுக்காமலே உங்க இதயம்  இரும்பு மாதிரி இருக்கான்னு இதை படிச்சி தெரிஞ்சிக்கோங்க

இன்று உலகில் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்படுவோர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் .அதனால் ஆரம்ப நிலையிலேயே சில அறிகுறிகளை வைத்து, இதய நோய்களை கண்டறியும் முறைகளை பற்றி கூறுகிறோம்

ஈசிஜி எடுக்காமலே உங்க இதயம்  இரும்பு மாதிரி இருக்கான்னு இதை படிச்சி தெரிஞ்சிக்கோங்க

மாரடைப்பின் மிக முக்கியமான அறிகுறி நெஞ்சு வலி, நெஞ்சு இறுக்கப்படுவது போன்றும், அழுத்தப்படுவது போன்றும் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.வாந்தி, வியர்வை மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல் போன்றவை மாரடைப்பின் மற்ற அறிகுறிகள்.நெஞ்சு வலி ஏற்படுதல், அத்தோடு இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, கழுத்து, கை, வயிறு என வலி பரவுவது மாரடைப்பு தீவிரமாவதற்கான அறிகுறிகள்

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன, பெண்களை பொறுத்தவரையில், உடல் அசதி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

இடுமட்டுமல்லமல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சில நேரங்களில், மாரடைப்பானது எவ்வித அறிகுறியும் இல்லாமல், முதல் தாக்கத்திலேயே உயிரைக் குடிக்கலாம். இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர்.

இதய படபடப்பு:

இதய படபடப்பு, இரும்புச் சத்து குறைவின் அறிகுறியாகும். ஹீமோகுளோபின் குறைந்தால் உடலின் திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் செல்லாது. ஆகவே, போதுமான ஆக்ஸிஜனை அளிப்பதற்காக இதயம் அதிகமாக வேலை செய்யும். அப்போது இதய துடிப்பு சீராக இருக்காது. இதற்குச் சிகிச்சையளிக்காவிட்டால் இதயம் வீங்கும்; இதயம் செயலிழக்கும். சருமத்தில் வறட்சி, கூந்தல் பாதிப்படைதல், நகங்கள் உடைதல் ஆகியவை இரும்புச் சத்து குறைந்துள்ளதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இரும்பு சத்துள்ள உணவுகள் கம்பம்புல், கேழ்வரகு, அவல், முளைகட்டிய கோதுமை, வறுத்த கடலை, வறுத்த பட்டாணி, கோயாபீன்ஸ், காராமணி, பீன்ஸ், வெங்காயத்தாள், வாழைக்காய், சுண்டைக்காய், காலிஃபிளவர், மணத்தக்காளி, முள்ளங்கிக் கீரை, பசலைக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல், சிறுமீன்கள், பாதாம், முந்திரி, கொப்பரைத் தேங்காய், தர்பூசணி விதை, நெல்லிக்காய், பேரீச்சை, கொய்யா, கொடுக்காப்புளி, அன்னாசி, மாதுளை, உலர்திராட்சை, சீத்தாப்பழம், காரட், கருணைக்கிழங்கு, வெல்லம், ஜவ்வரிசி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகமுள்ளதால் அவற்றை சாப்பிட்டு வந்தால் இதயத்தை பலப்படுத்தலாம் .