மின் இணைப்புல பெயர் மாத்தனுமா? – கவலைய விடுங்க… இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்!

 

மின் இணைப்புல பெயர் மாத்தனுமா? – கவலைய விடுங்க… இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்!

புதிதாக மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தால் பல்வேறு காரணங்களைக் கூறி அதிகாரிகள் இணைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு புகார்களும் மின் வாரிய உயர் அதிகாரிகளுக்குச் சென்றன. இதனால் புதிதாக மின் இணைப்பு கோரி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மின் வாரியம் அறிமுகப்படுத்தியது.

மின் இணைப்புல பெயர் மாத்தனுமா? – கவலைய விடுங்க… இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்!

இந்நிலையில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை மற்றொருவர் பெயருக்கு மாற்ற வேண்டுமெனில், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பெயர் மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாகப் புகார் பறந்திருக்கிறது. தற்போது இதற்கும் தீர்வு காண்பதற்காக இணையதளம் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறையை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.