ரேஷன் அட்டை இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 

ரேஷன் அட்டை இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசு மக்களுக்கு கொடுக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் நிவாரண தொகை உள்ளிட்ட பலவற்றை குடும்ப அட்டைகள் மூலமே வழங்கி வருகிறது. தற்போது கூட கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, முன்பணமாக 2 ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை வாயிலாகவே வழங்க உத்தரவிட்டுள்ளது. இது போன்ற இலவச பொருட்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் அறிவிப்பின் போது ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைனில் புதிய ரேஷன் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டை இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய குடும்ப அட்டையை பெற https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும்

பின்னர் மின்ணனு அட்டை விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து புதிய அட்டை என்பதை தேர்வு செய்வதுடன், Name of family head என்ற இடத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயரை பதிவிடுங்கள்.

பிறகு தங்களின் விவரங்கள், குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள்.

ரேஷன் அட்டை இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இருப்பிட சான்று என்ற இடத்தில் தங்களின் எரிவாயு சிலிண்டர் ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, தண்ணீர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அப்லோட்டு செய்யுங்கள். பிறகு எரிவாயு இணைப்பு நிறுவனம் பெயர், எத்தனை சிலிண்டர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கை என்ற பகுதியில் குடும்ப தலைவர் பெயரை பதிவிட வேண்டும்.
பிறகு குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் விவரங்கள் அனைத்தையும் சரிபாருங்கள். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான குறிப்பு எண் வரும். அதனை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணை வைத்து உங்கள் குடும்ப அட்டையின் நிலையை சரிபார்த்து கொள்ளுங்கள்.