மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்ல வேண்டுமா? இ- பாஸ் அப்ளை செய்வது எப்படி?

 

மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்ல வேண்டுமா? இ- பாஸ் அப்ளை செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு இ பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் சொந்த வாகனத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் அல்லது தமிழகம் விட்டு மற்ற மாநிலங்கள் செல்ல tnepass.tnega.org/#/user/pass என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்ல வேண்டுமா? இ- பாஸ் அப்ளை செய்வது எப்படி?

அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து செல்ல மற்றும் ஊரடங்கால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்போர்,அரசு வசதிகளை பெற்று திரும்ப, இ பாஸ் விண்ணப்பிக்க rtos.nonresidenttamil.org என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்

அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் e-pass பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ/ மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில்மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து e-pass பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.