வெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா?.. உண்மையில் என்ன நடந்தது?!

வெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா?.. உண்மையில் என்ன நடந்தது?!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி சென்ற கர்ப்பிணி யானையை சிலர் அண்ணாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து உணவு அளித்ததாகவும், அதனால் தான் அந்த யானை உயிரிழந்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரக்கமில்லாமல் மனிதர்கள் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?…

வெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா?.. உண்மையில் என்ன நடந்தது?!

உண்மையிலேயே அந்த யானை வெடிமருந்து வைத்துக் கொள்ளப்பட்டதா என்பதை இந்தியன் பிஸ்னஸ் டைம், இந்திய வனத்துறை அதிகாரியை பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அந்த யானைக்கு மக்கள் யாரும் வெடிமருந்து வைத்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். அப்பகுதி மக்கள் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்து வைப்பது வழக்கம் என்றும் பசியில் வந்த யானை அதனை உண்டு விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், சைலண்ட் வேலி தேசிய பூங்கா இருந்து வந்த அந்த யானை, உயிரிழந்தது பலருக்கும் வலியை கொடுத்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

வெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா?.. உண்மையில் என்ன நடந்தது?!

இது குறித்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டேவிட் கூறுகையில், இதுவரை நான் பல யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் முதன்முதலாக உயிரிழந்த அந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டியை வெளியே எடுத்த போது நான் நிலைகுலைந்து விட்டேன். அந்த யானை கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை செய்யும் போது தான் தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார். பசியால் அந்த பழத்தை உண்டு கர்ப்பிணி யானை உயிரிழந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.