’கொரோனா எப்படி உருவானது’ சீனா செல்லும் ஐநா குழு

 

’கொரோனா எப்படி உருவானது’ சீனா செல்லும் ஐநா குழு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 851 பேர்.

இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 158 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 81 ஆயிரத்து 255 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,10,50,438 பேர்.

’கொரோனா எப்படி உருவானது’ சீனா செல்லும் ஐநா குழு

உலகமே கொரோனா அச்சத்தால் மிரண்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸ் தொடங்கிய நாடு சீனா. தொடங்கிய இடம் வூகான். கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா… அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை அவ்வப்போது எழுப்பியே வருகின்றனர்.

அந்தச் சந்தேகங்களுக்கு சீனா பதில்களை அளித்தாலும், மீண்டும் வேறு வேறு வகைகளில் கேள்விகள் முளைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்த ஐநாவின் உலக சுகாதார மையம் ஒரு முயற்சியை மேற்கொள்ள விருக்கிறது.

’கொரோனா எப்படி உருவானது’ சீனா செல்லும் ஐநா குழு

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக சுகாதார மையத்தின் ஆய்வுக் குழு சீனாவில் உள்ள வூகான் நகருக்குச் செல்கிறது. அங்கு எப்படி கொரோனா உருவானது… எப்படி மனிதர்களுக்குப் பரவியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைத் தேட உள்ளது. அக்குழு அளிக்கும் முடிவைத் தெரிந்துகொள்ள உலகில் பலரும் காத்திருக்கிறார்கள்.

ஏனெனில், ஒரு வைரஸ் எப்படி உருவானது… பரவியது என்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதை அழிப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.