கொரோனா தடுப்பூசி எத்தனை முறை போட வேண்டும்? மத்திய அரசின் முக்கிய விளக்கம்

 

கொரோனா தடுப்பூசி எத்தனை முறை போட வேண்டும்? மத்திய அரசின் முக்கிய விளக்கம்

கொரோனா தாக்குதல் அதிகம் நடந்துகொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் பார்த்தால் அதிக கொரோனா பாதிப்புகளில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு. அதிக இறப்புகளைச் சந்தித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்.

ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இந்தியாவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பு எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருப்பது ஆறுதலான விஷயம். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனுமதி குறித்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றுக் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் குறிப்பு ஒன்றில்,  

கொரோனா தடுப்பூசி எத்தனை முறை போட வேண்டும்? மத்திய அரசின் முக்கிய விளக்கம்

’மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் கூடி,  இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும்,  அதேபோல கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கவும் பரிந்துரை செய்தது.

இந்த நிபுணர் குழுவில், நுரையீரல், நோய் எதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம், உள் மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை இடம் பெற்றிருந்தனர்.

பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் இந்திய அளவிலும் உலகளவிலும் சிறப்பாக இருந்தது.

கொரோனா தடுப்பூசி எத்தனை முறை போட வேண்டும்? மத்திய அரசின் முக்கிய விளக்கம்

இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள்  இரண்டு முறை போடப்பட வேண்டும். இவைகள் அனைத்தையும் 2-8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுத்து வைத்திருக்க வேண்டும்.

போதிய ஆய்வுகளுக்கு பிறகு, நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்க, மத்திய  மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (அனைத்து இடங்களிலும்)  முடிவு செய்துள்ளது. இந்திய சீரம் மையம், பாரத் பயோ டெக்  நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசர சூழலில் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும், கேடிலா ஹெல்த்கேர் நிறுவனம் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.