• October
    24
    Thursday

Main Area

Main



சர்க்கரையில் இத்தனை விஷமா...? பரிசோதித்து பாருங்க!

சர்க்கரை
சர்க்கரை

காலையில் எழுந்ததுமே சிலருக்கு டீ, காபி இல்லாமல் அன்றைய நாள் விடியாது. தவிர, தமிழகம் முழுக்கவே ஒரு தெருவிற்கு குறைந்தது ஐந்தாறு டீக்கடைகளாவது இருக்கிறது. இன்னும் சிலரோ மதிய சாப்பாட்டை எல்லாம் தியாகம் செய்து ஒரு நாளைக்கு பத்து, பதினைந்து கோப்பை டீ, காபியுடனே அன்றைய பொழுதை கழித்து விடுகிறார்கள். அப்படி இந்த டீ, காபிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்கரையில் எத்தனை ஆபத்துக்கள் இருக்கிறது தெரியுமா?

sugar

பல் வலி, பல் சொத்தையில் ஆரம்பித்து, குடல் வலி, புற்று நோய் வரையில் இந்த வெள்ளை சர்க்கரை அனைத்து நோய்களையும் அழையா விருந்தாளியாக நம் உடலுக்குள் கொண்டு வந்து விடுகிறது... இத்தனை வருஷமா இதைத் தானே பயன்படுத்தி வர்றோம் என்று வாதம் செய்பவர்கள் உங்கள் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை கொஞ்சம் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் துவைக்கப் போட்டிருக்கும் துணிகளில், அதிக அழுக்கு இருக்கும் ஏதாவதொரு சட்டையை எடுத்து, சட்டைக் காலரில் எந்த இடத்தில் அழுக்கு போகவே மறுக்கிறதோ அந்த இடத்தில், இப்போது கைகளில் வைத்திருக்கும் சர்க்கரையைக் கொண்டு தேய்த்துப் பாருங்கள். 
என்னாச்சு..? சில நொடிகளில் அழுக்குகளும், கறைகளும் மாயமாய் மறைச்சுடுச்சா... ஆமாம்.. அழுக்குகளையும், கறைகளையும் போக்கும் ஒரு கெமிக்கலைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இந்த சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரையையும், பனை வெல்லத்தையும் பயன்படுத்துங்கள். ஆரம்பத்தில் சுவை வேறுபடும். ஒரே வாரத்தில் அந்த சுவை உங்களுக்கு பழக்கமாகிவிடும்.  வெள்ளை வெளேர் என்று இருக்கும் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை தெரிந்து கொண்டால் இனி கனவில் கூட அதைத் தொட்டுப் பார்க்க விரும்ப மாட்டீர்கள்.
முதலில் கரும்பிலிருந்து சாறு பிழிந்து எடுக்கப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். அதன் பின்னர், பிழிந்த கரும்பு சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

tooth pain

அதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து அதன் மீது சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். பின்னர் இந்த கலவையை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை எல்லாம் அழித்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். அதில் தான் அந்த வெள்ளை வெளேர் நிறம் வந்து விடுகிறது. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது. பின்னர், சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சர்க்கரையாக வெளியில் வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்து விடுகிறது. இப்படித் தயாரான சர்க்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. இது தவிர, இப்படி தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரைகளை சாப்பிடவே கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு எனும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறி விடுகிறது. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்  சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணமாக அமைகின்றது. ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, இனி வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

2018 TopTamilNews. All rights reserved.