குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? – உச்ச நீதிமன்றம் கேள்வி

 

குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? – உச்ச நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திலிருந்த 35 குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாக செய்தி வெளியானது. செய்தியை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை

குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? – உச்ச நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் எழுப்பியது. தமிழகத்தில் எத்தனை காப்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது, தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன, காப்பத்துக்கு அரசு எவ்வளவு செலவிடுகிறது என்று விளக்கம் அளிக்க கேட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், தற்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. காப்பகங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது” என்று கூறியது.

குழந்தைகள் காப்பகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? – உச்ச நீதிமன்றம் கேள்விஇது மிகவும் குறைவான தொகை என்பதால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மத்திய அரசு எவ்வளவு செலவிடுகிறது என்று விவரத்தை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆண்டுக்கு 5.5 லட்சம் ரூபாயை வைத்து காப்பகங்கள் என்ன செய்யும்? இதுபோன்ற வழக்கு விசாரணை நடந்தால் மட்டும்தான் இதுபோன்ற ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் போல!