பேடிஎம் நிறுவனத்தின் இழப்பு இத்தனை கோடியா ?

 

பேடிஎம் நிறுவனத்தின் இழப்பு இத்தனை கோடியா ?

இந்தியாவின் முன்னணி பணப் பரிமாற்ற செயலியான பேடிஎம், இன்னமும் லாபப் பாதைக்கு திரும்பவில்லை என்பதையே அதன் நிதிநிலை முடிவுகள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் 1.3 சதவீதம் அதிகரித்தாலும், நிகர இழப்பு ரூ.2,942 கோடியாக உள்ளதாம்.

பேடிஎம் நிறுவனத்தின் இழப்பு இத்தனை கோடியா ?

ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு பேடிஎம் நிறுவனம் தாக்கல் செய்துள்ள தகவல்கள்படி நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் 2,942 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டான 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நிறுவனத்தின் இழப்பு 4,217 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட்டின் போன் பீ, கூகுள் பே உள்ளிட்ட பணப் பரிமாற்ற செயலிகளுக்கு கடும் போட்டியை பேடிஎம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் வருவாய் ஒட்டுமொத்தமாக 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 3,628 கோடி ரூபாயாக உள்ளது. இது அதற்கு முந்தையை நிதியாண்டில் 3,579 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் இழப்பு இத்தனை கோடியா ?

இது தொடர்பாக தகவல்களை செப்டம்பர் மாதத்தில் பேடிஎம் அளித்துள்ளது. நிறுவனத்தின் இழப்புகளை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு இழப்பு என்கிற தகவல்களை பதிவு செய்யவில்லை. இந்த தகவல்கள்படி பேடிஎம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.3,350 கோடியாக உள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும் தங்களது இழப்புகளை 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் இழப்புகளை கணிசமாக குறைந்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் இழப்பு இத்தனை கோடியா ?

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணப் பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறிய நிலையில், பேடிஎம் நிறுவனம் கணிசமாக இழப்பை குறைத்திருக்க வாய்ப்புள்ளது. எனினும் அது தொடர்பாக தகவல்களை தற்போதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.