மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?

 

மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?

சட்டப்பேரவை தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் விசிக மற்றும் மதிமுக கட்சிகள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.

மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என இன்று முடிவாகிறது.

மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முடிவு இறுதியாக உள்ளதாக தெரிகிறது. தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மதிமுக , விசிக கூறியுள்ள நிலையில் அதற்கு திமுக தலைமை தலையசைத்துள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் பெரிய அளவில் முரண்பாடுகள் இருக்காது என்றும் நம்பப்படுகிறது