தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.1.25 லட்சம் வசூல்!

 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.1.25 லட்சம் வசூல்!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அறிவித்த தமிழக அரசு கொரனோ பரிசோதனைக்கு , ₹ 4,500 கட்டணம் நிர்ணயித்ததாகவும், ஆனால் பரிசோதனைக்கு ₹ 6,000 முதல் 8,000 வரை வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கறிஞர் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். முழு உடல் கவசத்திற்கு ₹ 10000, வெண்டிலட்டர்களுக்கு ஒரு நாளைக்கு ₹ 1.25 லட்சம் வசூலிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணம் நிர்ணயிப்பதுடன், முறையாக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.1.25 லட்சம் வசூல்!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள் வாங்க வேண்டிய கட்டணம் தொர்பாக நிர்ணயம் செய்யப்பட்டு நாளை காலை அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.