சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

 

சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

சசிகலா உடல்நிலை பற்றிய செய்திகளின் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான தீர்ப்பு வெளிவந்த போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் சசிகலா உள்ளிட்ட மூவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் விடுதலை தேதி ஜனவரி 27. சசிகலாவை வரவேற்க தினகரன் உள்ளிட்டோர் பெரும் ஏற்பாடுகளைச் செய்துவந்தனர்.

நேற்று திடீரென்று சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. உடனே அருகில் சிவாஜி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு நவீன உபகரணங்கள் இல்லாததால் இன்று பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது நெகட்டிவ் என்றே வந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

முதலில் அனுமதிக்கப்பட்ட சிவாஜி சாலை மருத்துவமனையிலிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் செல்லும்போது சக்கர நாற்காலியில் அமர வைத்து வெளியே அழைத்து வரப்பட்டார் சசிகலா. அப்போது தொண்டர்களைப் பார்த்து சசிகலா கையை அசைத்தார். அப்போது சசிகலாவுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட வில்லை.

சசிகலாவைச் சுற்றி மாஸ்க் அணியாத அத்தனை பேரா? – புது சர்ச்சை!

அவருக்கு மட்டுமல்லாமல் அவரை சுற்றி கிட்டத்தட்ட ஒரு பதினைந்து பேருக்கு மேல் நின்று இருந்தார்கள். அவர்களில் செவிலியர்கள் மருத்துவர்கள் காவலர்கள் உள்ளிட்ட பலரும் இருந்தனர். அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் மாஸ்கை ஒழுங்காக அணியவில்லை. பெரும்பாலும் போட்டோக்கு போஸ் கொடுப்பது போல முகம் நன்கு தெரியும்படி மாஸ்க்கை இறக்கி கழகத்தில் போட்டிருந்தார்கள்.

கொரோனா காலச் சிக்கல்கள் இன்னும் முடிவடையாத நிலையில் அனைவரையும் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தலை மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகின்றன. ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கிறது என்ற சிக்கல் உள்ள சசிகலாவுக்கு மாஸ்க் அணியாமல் கொண்டுவந்ததும், சுற்றி இருந்தவர்கள் மாஸ்கைச் சரியாக அணியாதததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தெரியாமல் நடந்ததா…. இல்லை வேண்டும் என்றே அவ்வாறு அழைத்து செல்லப்பட்டாரா என்கின்ற கேள்வியும் பலருக்குள்ளும் எழுந்திருக்கிறது. இது இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் காவல்துறை தரப்பில் விளக்கம் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை.