புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? முழு தகவல் உள்ளே!

 

புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? முழு தகவல் உள்ளே!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய வகை B-117 கொரோனா வைரஸால், பிரிட்டன் உடனான போக்குவரத்தை பல நாடுகள் துண்டித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலும் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி பரிசோதனையும் செய்யப்பட்டு வருவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? முழு தகவல் உள்ளே!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22,272 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு 1,01,69,118 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 1,47,343 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 97,40,108 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 2,81,667 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.