darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



இன்னும் எத்தனை வாட்டிதாங்க ரிலீஸை தள்ளிப்போடுவீங்க?...’களவாணி2’க்கு மீண்டும் தடை...

களவாணி 2
களவாணி 2

’களவாணி 2’ ’அந்தக் கிழவனா நீ’ என்று ரொம்ப வயசானபிறகுதான் ரிலீஸாகும் போலிருக்கிறது. படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் படத்தை வெளியிட தடைவிதித்திருக்கிறது.

kalavani 2

சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கும் களவாணி 2’தான்  கடந்த 2019ம் ஆண்டில் அதிக பஞ்சாயத்துகளைச் சந்தித்த படம் என்று அப்பட நாயகி ஓவியாவில் தலையில் அடித்து சத்தியம் பண்ணலாம். படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், துவக்கத்திலிருந்தே தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் ’இது என் படம்.. நான் தான் தயாரிப்பாளர்’ என்று ஃபைனான்ஸ் பண்ணிய பணத்துக்காக படத்தையே பிடுங்க அடம்பிடித்தார்.

kalavani 2

அந்தப் பஞ்சாயத்து தனிப்பட்ட முறையில், தயாரிப்பாளர் சங்கத்தில், கோர்ட்டுகளில் என்று பல லொகேஷன்களில் நடந்து முடியவே ஆறு மாதங்களுக்கும் மேல் ஆக, படத்தின் நாயகன் விமல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொறுப்பேற்றவுடன் சிங்காரவேலன் ஒதுங்கிக்கொண்டார். ஷ்ஷ்ஷ் அப்பாடா ஒரு வழியா ரிலீஸை நோக்கி வந்தாச்சி என்று இயக்குநர் சற்குணம் பெருமூச்சு விட்டு நாளை மறுநாள் ஜூலை 5ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்.

kalavani 2

இந்நிலையில் சற்றுமுன்னர் இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருப்பதாகவும் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஜெயக்குமார் என்பவர் இத்தடையை வாங்கியிருப்பதாகவும் தகவல்.

2018 TopTamilNews. All rights reserved.