ஐபிஎல் போட்டிகள் மூலம் இத்தனை கோடி வருமானமா? அதிர வைக்கும் தொகை!

 

ஐபிஎல் போட்டிகள் மூலம் இத்தனை கோடி வருமானமா? அதிர வைக்கும் தொகை!

கிரிக்கெட் ரசிர்களின் கொண்டாட்டம் தான் ஐபிஎல் போட்டிகள்.  கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள் மூலம் இத்தனை கோடி வருமானமா? அதிர வைக்கும் தொகை!

அதன்படி சரியாகத் தொடங்கி 60 போட்டிகளையும் சிறப்பாக நடத்தி முடித்தது ஐபிஎல் நிர்வாகம். இம்முறை மைதானத்திற்கு ஆடியன்ஸ் அனுமதியில்லை அதனால் அந்த வருவாய் இல்லை. அதேபோல, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக 10 கோடி ரூபாய் செலவழிக்க ஐபிஎல் சார்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், டைட்டில் ஸ்பான்ஸர் கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. கடைசியில்தான் ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இப்படி பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால், இம்முறை ஐபிஎல் போட்டிகள் மூலம் லாபம் வந்திருக்குமா… என்பது பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால், பெரிய அளவில் லாபம் பார்த்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

ஐபிஎல் போட்டிகள் மூலம் இத்தனை கோடி வருமானமா? அதிர வைக்கும் தொகை!

கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, “இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐபிஎல் 2020 போட்டிகள் மூலமாக 4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாம். நேரடியாக ஆடியன்ஸ் வரவில்லை என்பதும், அதன்மூலம் வருமானம் இல்லை என்பதும் ஒரு குறை என்றால், டிவி மூலம் மேட்ச் பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும் 20-25 சதவிகிதம் அதிகரித்து விட்டதாம்.