Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ''சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் 'டி' பெற எவ்வளவு நேரம் ஆகும்'' ? -ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள் !

”சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் ‘டி’ பெற எவ்வளவு நேரம் ஆகும்” ? -ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள் !

உடலுக்கு தேவையான வைட்டமின் ‘டி’ சத்தை சூரியனிலிருந்து பெறுவதற்கு குளிர்காலங்களில் 2 மணிநேரம் வரை சூரியன் உடலில் படும் படி நடமாட வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

D என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு சிறப்பு உண்டு. D என்ற ஆங்கில எழுத்தில் தான் DISEASE ( நோய்), DOCTOR ( மருத்துவர்) DRUGS ( மருந்து), DEATH ( மரணம்) ஆகிய நான்கு வார்த்தைகளும் வருகிறது. இந்த டியை சரியாக வைத்துக் கொண்டால் DEFINITELY (உறுதியாக) ஆரோக்கியம் தான். இந்த வரிசையில், மிக முக்கியமான சத்தாக கருதப்படும் வைட்டமின் டியை உடலுக்கு தேவையான அளவில் நாம் பெற்று வந்தால், ஆரோக்கியம் எப்போதும் நிலைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய வாழ்வியல் சூழலில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வெளியிடங்களுக்கு சென்றால் கார், ஆட்டோவிலும், வீடு மற்றும் அலுவலகம் சென்றவுடன் செல்போன், டிவி, கம்ப்யூட்டர் என சூரிய ஒளி மேனி மீது படாதவாறு, அறைகளுக்குள் முடங்குவதால் தான் வைட்டமின் டி சத்துக்குறைபாடு அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உலகளவில் 50 சதவீதம் மக்களுக்கும், இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கும் வைட்டமின் டி சத்துக்குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

வைட்டமின் டி சத்து குறைபாட்டினால், எலும்பு மற்றும் முதுகு தண்டு வலி மட்டுமின்றி, நரம்பு, பற்களிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எலும்பு தேய்மானம், அழற்சி, முதுகு தண்டு வட பாதிப்பு, முதுகு மற்றும் மூட்டு வலி, பற்கள் பாதிப்பு என பல நோய் பாதிப்புகளுக்கும் வைட்டமின் டி சத்துக்குறைபாடு காரணமாக உள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது.

வைட்டமின் டியை பெறுவதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியதில்லை. இயற்கையே நமக்கு இலவசமாக அளிக்கிறது. சூரிய கதிரிலிருந்து இலவசமாக வைட்டமின் டி ஐ பெறலாம். இந்த குறைப்பாடுகள் ஏற்படாத வண்ணம் தங்களை பாதுகாத்துக்கொள்ள, உடலில் சூரியஒளி படும் படி சில நேரம் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில் வைட்டமின் டியை பெறுவதற்கு எவ்வளவு நேரம் சூரிய ஒளி படும்படி நடமாட வேண்டும் என்பது குறித்து ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கோடை மற்றும் இளவேனிற்காலங்களில் 10 முதல் 20 நிமிடங்களுக்கு சூரிய ஒளி உடலில் படும் படி செலிட்டால் போதும் என்றும் குளிர்காலங்களில் மட்டும் 2 மணிநேரம் வரை செலவிட வேண்டும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

இதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கி உள்ளனர். கோடை மற்றும் இளவேனிற்காலங்களில், 25 சதவீதம் வரை நமது உடலில் சூரிய ஒளி படும் என்றும், ஆனால் குளிர்காலங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நாம் இருப்பதால் உடலின் 10 சதவீத பகுதிகளிலேயே சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பு இருப்பதே இதற்கு காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேப்போல சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டியை பெறுவதற்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தான் சிறந்த நேரம் என்றும் இந்த சமயத்தில் உடலில் சூரிய ஒளி நன்கு படும்படி நடமாடினால், வைட்டமின் டி சத்துக்குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • எஸ். முத்துக்குமார்

மாவட்ட செய்திகள்

Most Popular

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை!

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி...

“அப்பா இருந்த கட்டிலில் அடுத்தவனோடு படுத்திருக்கியே .” -தாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள்

ஒரு தாயின் கள்ளக்காதலன் அவர்களின் அந்தரங்க படங்களை அந்த பெண்ணின் பிள்ளைகளுக்கு அனுப்பியதால் அந்த பெண் போலீசில் புகாரளித்தார். குஜராத்தின்...

ஐகோர்ட் கேள்வி..என்ன சொல்லப்போகிறார் அமித்ஷா?

தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிக்கும் விவகாரத்தில், விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. மதுரை...

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 56 நாளான இன்று...
Do NOT follow this link or you will be banned from the site!