எப்படி இருக்கிறார் சசிகலா?

 

எப்படி இருக்கிறார் சசிகலா?

சசிகலா தற்போது பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. லேசான தொற்று நுரையீரலில் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறார் சசிகலா?

ஜன.27ம் தேதி விடுதலையாகவிருந்த சசிகலாவுக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் உடல்நலக்குறைவால் திட்டமிட்டப்படி ஜன.27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவாரா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.