ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு சீன ஆப் தடை எப்படி பதிலடியாகும்? கரூர் ஜோதிமணி எம்.பி கேள்வி

 

ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு சீன ஆப் தடை எப்படி பதிலடியாகும்? கரூர் ஜோதிமணி எம்.பி கேள்வி

20 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கும் இந்திய நிலப்பரப்பு ஆக்கிரமிப்புக்கும் சீன ஆப்கள் மீதான தடை எப்படி பதிலடியாக இருக்கும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு சீன ஆப் தடை எப்படி பதிலடியாகும்? கரூர் ஜோதிமணி எம்.பி கேள்விசீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். பல சதுர கி.மீ நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு ராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு சீன ஆப் தடை எப்படி பதிலடியாகும்? கரூர் ஜோதிமணி எம்.பி கேள்விசீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறது, சீனப் பொருட்களுக்கு தடை விதித்துவிட்டால் இந்த பிரசாரம் தேவையில்லையே என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலையில் சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

http://


இது குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “சீனா என்ற வார்த்தையை உச்சரிக்கவே மோடி ஏன் அச்சப்படுகிறார்? செயலிகளை மட்டும் தடை செய்வது( அலிபாபா தடை இல்லை) எப்படி 20 இராணுவ வீரர்களின் உயிருக்கும்,ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலப்பரப்பிற்கும் பதிலடியாகும்?இப்படியொரு பலவீனமான பிரதமரின்கீழ் இந்ததேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.