ஜாப்னா சூப்பரான வெற்றியோடு ஃபைனலுக்கு முன்னேறியது எப்படி? #LPL

 

ஜாப்னா சூப்பரான வெற்றியோடு ஃபைனலுக்கு முன்னேறியது எப்படி? #LPL

பரப்பரப்பான ஆட்டத்தில் ஜாப்னா அணி அசத்தலான வெற்றியைச் சூடியிருக்கிறது. இது பலருக்குமே ஆச்சர்யம்தான். இலங்கையில் LPL போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங் , ஜாப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

இதில் கண்டி அணி மட்டும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மற்ற அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியோடு மோதியது காலி கிளாடியேட்டர்ஸ் அணி. இதில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

ஜாப்னா சூப்பரான வெற்றியோடு ஃபைனலுக்கு முன்னேறியது எப்படி? #LPL

நேற்று இரவு இரண்டாம் அரையிறுதிப் போட்டி ஜாப்னா ஸ்டாலியன்ஸ் Vs தம்புள்ளை வைக்கிங் என்று அமைந்தது.

முதலில் பேட்டிங் ஆடியது ஜாப்னா அணியே. சார்லஸ் 56 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். அதேபோல அவிஷ்கா 26 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொல்லும்படி ஆட வில்லை என்றாலும், 165 எனும் ஓரளவு நல்ல ஸ்கோராகவே ஆட்டத்தை முடித்தது ஜாப்னா. 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து ஆடிய தம்புள்ளை வைக்கிங்கில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தரங்கா மட்டும் தாக்குப் பிடித்து 33 ரன்களை எடுத்தார். அதற்கு 39 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஹசரங்கவின் அசத்தலான சுழற்பந்து வீச்சில் தம்புள்ளை அணி சுருண்டது. 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைப் பறித்தார் ஹசரங்க.

ஜாப்னா சூப்பரான வெற்றியோடு ஃபைனலுக்கு முன்னேறியது எப்படி? #LPL

என்னதான் போராடியும் தம்புள்ளை அணியால் வெற்றி இலக்கை நெருங்கக்கூட முடியவில்லை. இறுதியாக, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்து 128 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது அந்த அணியால்.

இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஜாப்னா அணி அசத்தலான வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியோடு மோதுகிறது ஜாப்னா அணி.