120 நாள் பால் பற்றி புகார் கூறிய ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அதை அறிமுகம் செய்தது எப்படி? – விளக்கம் கேட்கும் பால் முகவர்கள்

 

120 நாள் பால் பற்றி புகார் கூறிய ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அதை அறிமுகம் செய்தது எப்படி? – விளக்கம் கேட்கும் பால் முகவர்கள்

120 நாள் கெட்டுப்போகாத பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆவினின் 120 நாள் கெட்டுப்போகாத பால் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

120 நாள் பால் பற்றி புகார் கூறிய ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அதை அறிமுகம் செய்தது எப்படி? – விளக்கம் கேட்கும் பால் முகவர்கள்தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 புதிய வகை பால் பொருட்களை அறிமுகம் செய்துள்ள ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.அதே சமயம் சில்லறை வணிகர்கள், பொதுமக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளையும், உழைப்பிற்கேற்ற வருமானத்தையும் தராத வரை ஆவின் நிர்வாகம் எத்தனை வகையான புதிய வகை பால் பொருட்களை அறிமுகம் செய்தாலும் அது வெற்றியை ஈட்டாது.

120 நாள் பால் பற்றி புகார் கூறிய ராஜேந்திர பாலாஜி, ஆவினில் அதை அறிமுகம் செய்தது எப்படி? – விளக்கம் கேட்கும் பால் முகவர்கள்மேலும் கடந்த 2017ம் ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் 90 நாள், 120நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் பாலில் ரசாயனம் கலப்படம் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஆவின் நிறுவனத்திலிருந்து 90 நாள் கெட்டுப் போகாத பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் தரம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.