140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்

 

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்

இந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்று டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். எனவே, எல்லா நாட்டையும் ஒன்றாக பார்க்க முடியாது. இந்தியாவில் சமூக பரவல் இல்லை” என்று கூறினார்.

http://


இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நம்மைவிட மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது பற்றி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். நேரடியாக ஹர்ஷவர்தனை கேட்கவில்லை. யாரையும் அவர் குறிப்பிடவில்லை.

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்

பொத்தாம் பொதுவாக கேட்பது போல அந்த பதிவு உள்ளது. அதில், “உலகில் சீனாவில் தான் கொரோனா முதலில் தாக்கியது என்றாலும் வூபெய் மாகாணத்தை தாண்டாமலும், ஷாங்காய், பீஜிங் நகரங்களை அதிகம் பாதிக்காமலும் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா கட்டுப்படுத்தியது எப்படி? 3 மாதங்களாகியும் விடை தெரியாமல் நான் வியக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!” என்று கூறியுள்ளார்.