தமிழக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி? – கனிமொழி கேள்வி

தமிழக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி? – கனிமொழி கேள்வி

ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் கொரோனா ஆக்டிவ் கேஸ் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி என்று தமிழக அரசுக்கு கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை தமிழக அரசு வெளியிட்ட கொரோனா தொற்று அறிக்கை அடிப்படையில் ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 10 நாளில் கொரோனாத்

தமிழக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி? – கனிமொழி கேள்வி

தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 58,011 ஆக உள்ளது. புதிதாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கைக்கும் ஆக்டிவ் கேஸ்-க்கும் இடையே 9529 நோயாளிகள் அளவில் இடைவெளி உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில், “தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது. தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி? – கனிமொழி கேள்வி

236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று ஜூன் மாதத்தில் செய்தி வெளியாகியது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு” என்று கூறியுள்ளார்.

தமிழக கொரோனா நோயாளிகள் பட்டியலில் இருந்து 9500 பேர் விடுபட்டது எப்படி? – கனிமொழி கேள்வி

தமிழக அரசு தினமும் வெளியிடும் கொரோனா புள்ளிவிவரத்தில் ஏராளமான முரண்பட்ட தகவல் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிக்கு கரும்புள்ளியாக அமைந்துவிடுகின்றன. இந்த விவகாரத்தில் அரசு விழிப்பாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.