ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்? அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு கேள்வி?

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்? அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு கேள்வி?

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்? அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு கேள்வி?

இந்நிலையில் ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட திரட்ட முடியும் என் அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஓராண்டில் ரூ. 314 கோடியை அண்ணா பல்கலையால் உருவாக்க முடியும் என கடந்த ஜூலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக செய்தி வெளியானது. இதன் காரணமாக ரூ. 314 கோடி திரட்டுவது குறித்த சாத்தியத்தன்மையை தெரிவிக்குமாறு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்? அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு கேள்வி?

முன்னதாக சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசு ஒன்றும் கூடுதலாக நிதி தர வேண்டியது இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக்கழகத்தால் தானே வருடத்திற்கு ரூபாய் 314 கோடி, ஐந்து வருடத்திற்கான ரூபாய் 1,570 கோடியைத் திரட்டிக்கொள்ள இயலும் என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.