தேர்வு எழுதாமல் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெற முடியும்? நீதிமன்றம் கேள்வி!

தேர்வு எழுதாமல் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெற முடியும்? நீதிமன்றம் கேள்வி!

அரியர் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதாமல் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெற முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இறுதியாண்டை தவிர பிற ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு எழுதாமல் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெற முடியும்? நீதிமன்றம் கேள்வி!

இதனிடையே, அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்ததாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதனை ஏ.ஐ.சி.டி.இ-யும் உறுதிப்படுத்தியது. இதனால் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி மாணவர்களிடையே வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியர் தேர்ச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதை மாணவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்வு எழுதாமல் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெற முடியும்? நீதிமன்றம் கேள்வி!

மேலும் அரியர் தேர்வு ரத்துக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசும் பல்கலைக் கழக மானியக்குழுவும் பதிலளிக்க நவம்பர் 20 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.