நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

நீட் தேர்வுக்கு பயிற்சி கூட பெற முடியாத நிலையில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எப்படி பயன் தரும் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து, தமிழக ஆட்சியாளர்கள் ஆடிய நாடகம் நீதிமன்றம் மூலம் அம்பலமானது.

மத்திய அரசிடமிருந்து நீட் மசோதாக்கள் திரும்பி வந்தவுடனேயே அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை பழனிசாமி அரசு மேற்கொள்ளாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில், நீட் தேர்வுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் பெறும் ஏராளமான தனியார் மையங்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் நீட் தேர்வுக்கான பயிற்சி பெறுவதும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

அரசு சார்பில் நடத்துவதாக சொன்ன நீட் தேர்வு பயிற்சியும் வழக்கம்போல சரியான திட்டமிடுதலோ, முறையான செயல்படுத்துதலோ இல்லாமல் தோல்வியடைந்திருக்கிறது. இதன் விளைவாக தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதே இல்லை. அப்படியே எழுதினாலும் தேவையான மதிப்பெண்களை பெற முடியவில்லை.

http://


இந்தச் சூழலில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க பழனிசாமி அரசு முடிவெடுத்திருக்கிறது. அதிலும்கூட, இதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் குழு அளித்த 10% பரிந்துரையை 7.5% ஆகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால், நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறவே வழியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு எப்படிப் பயன்தரும் என்று தெரியவில்லை.

எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழுமையான விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்து, அதை மத்திய அரசை ஏற்றுக்கொள்ள செய்வது மட்டுமே இவ்விவகாரத்தில் நிரந்தரத் தீர்வாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி தப்பிக்க நினைக்காமல், மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை பழனிசாமி அரசு சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்குப் பதிலாக, உள் ஒதுக்கீடு என்பதெல்லாம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, நிஜமான பிரச்னையைத் திசை திருப்பும் வேலையாகவே பார்க்கவேண்டி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Most Popular

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில்...

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என...

தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

ரயில்வே துறை வங்கிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ,உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களே அதிகம் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆந்திரா,...

காதலித்த மாணவி திடீர் டாட்டா… இன்ஜினீயரின் செயலால் பதறிய பெற்றோர்!

காதலித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக பதிவு செய்த இன்ஜினீயரிங் காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடம் காஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் ( 24)....
Do NOT follow this link or you will be banned from the site!