7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 35 % வீழ்ச்சி – சென்னையில் 36 % சரிவு

7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 35 % வீழ்ச்சி – சென்னையில் 36 % சரிவு

கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில், நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை 35 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 35 % வீழ்ச்சி – சென்னையில் 36 % சரிவு

பிராப்ஈக்விட்டி என்ற ஆய்வு நிறுவனம், இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வீடு விற்பனை 35 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த 7 நகரங்களிலும் சேர்த்து மொத்தம் 78 ஆயிரத்து 472 வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.

7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 35 % வீழ்ச்சி – சென்னையில் 36 % சரிவு

அதே சமயம், நடப்பாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 24 ஆயிரத்து 936 வீடுகள் விற்பனையாகி இருந்த நிலையில், 2வது காலாண்டில், வீடு விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது படிப்படியாக மீண்டு வருவதை உணர முடிவதாக பிராப்ஈக்விட்டி நிறுவனத்தின் தலைவர் சமீர் ஜசூஜா தெரிவித்துள்ளார். பண்டிகை காலம் நெருங்குவதால் வீடுகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 35 % வீழ்ச்சி – சென்னையில் 36 % சரிவு

2வது காலாண்டில் சென்னையில் 2403 வீடுகள் விற்பனையாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே 2வது காலாண்டில் 3,749 வீடுகள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது, 36 சதவீத வீழ்ச்சியை சென்னை சந்தித்துள்ளது. அதிகபட்ச விற்பனை சரிவை பெங்களூரு புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் பெற்றுள்ளன. இந்த மூன்று நகரங்களிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 6098 வீடுகள், 9539 வீடுகள், மற்றும் 2239 வீடுகள் என்றளவில் அனைத்து நகரங்களும் 44 சதவீத விற்பனை சரிவை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்