“இனி வாடகைக்கு வீடு மலிவாக கிடைக்கும்’- அரசு அதிரடித் திட்டம்

 

“இனி வாடகைக்கு வீடு மலிவாக கிடைக்கும்’- அரசு அதிரடித் திட்டம்

இன்றைய காலகட்டத்தில் வாடகைக்கு வீடு என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. மாத வாடகை என்பது மிக அதிகமாக உயர்ந்து விட்ட நிலையில், அட்வான்சும் 10 மடங்கு என்கிற ரீதியில் அதிகரித்து விட்டது.இதுதவிர வாடககைக்கு வீடு தேடி அலைவதே பெரும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில்,வேலைக்காக நகரங்களைத் தேடி வருவோருக்கும், ஏழைகளுக்கும்

“இனி வாடகைக்கு வீடு மலிவாக கிடைக்கும்’- அரசு அதிரடித் திட்டம்

வாடகைக்கு மலிவான வீடுகளைத் தரும் திட்டம் ஒன்றை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இத்திட்டத்தால் 3.5 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மலிவு விலை வாடகை வீடு திட்டத்திற்காக arhc.mohua.gov.in என்ற போர்ட்டலைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், மலிவான விலையில் வீடுகள்

“இனி வாடகைக்கு வீடு மலிவாக கிடைக்கும்’- அரசு அதிரடித் திட்டம்

வாடகைக்கு கிடைக்கும்.. இந்தத் திட்டம் பொது மற்றும் தனியார் இணைப்பு மூலம் செயல்படுத்தப்படும். இதுதவிர மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள வீடுகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும். கட்டுமான நிறுவனங்கள் தங்கள் காலியான நிலத்தில் அடுக்கமாடி கட்டிடங்கள் கட்டும் மற்றும் அதன் பராமரிப்பையும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். மலிவான வீடுகளை கட்டியெழுப்பும் நிறுவனனங்களுக்கு பல சலுகைகளும், மானியங்களும் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக கநகர்ப்புற கட்டுமான அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அரசாங்கத்துடன் இணைந்து இந்த வீடுகளை காட்டிய பின்னர், அது வாடகைக்கு விடப்படும். என மத்திய அரசு தெரிவித்துள்ளது.