ஐபிஎல் போட்டிக்காக புதிய வசதிகளை அளிக்கும் ”ஹாட்ஸ்டார்”

 

ஐபிஎல் போட்டிக்காக புதிய வசதிகளை அளிக்கும்  ”ஹாட்ஸ்டார்”

ஐபிஎல் போட்டிகள், தொடங்குவதை முன்னிட்டு, அதை ஒளிபரப்பு செய்யும் டிஸ்னி -ஹாட்ஸ்டார் செயலி, பல புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை அளிக்கும் வகையில், பல புதிய வசதிகளை டிஸ்னி – ஹாட்ஸ்டார் ஏற்படுத்தி தந்துள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக புதிய வசதிகளை அளிக்கும்  ”ஹாட்ஸ்டார்”

இந்த புதிய வசதிகளை, சந்தா செலுத்திய வாடிக்கையாளர்கள் மட்டுமே கண்டு களிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் போது ஒவ்வொரு பந்துக்கும், என்ன நடக்கும் என கணித்து குடும்பத்தாருடன் போட்டி போடும் வாட்ச் அண்ட் பிளே என்ற வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய எமோஜி வசதிகளுடன், வாடிக்கையாளர்கள் தங்களை செல்பி எடுத்து பதிவிடும் ”ஹாட்ஷாட்ஸ்” வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீடியோக்களையும் எடுத்து பதிவிடும் டூயட்ஸ் வசதி என ஏராளமான வசதிகளை ஹாட்ஸ்டார் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உள்ள சிறந்த செல்பி மற்றும் வீடியோக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிகிறது.

ஐபிஎல் போட்டிக்காக புதிய வசதிகளை அளிக்கும்  ”ஹாட்ஸ்டார்”
  • எஸ். முத்துக்குமார்