இங்கிலாந்து: பக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே அமைந்துள்ள ஓட்டலில் ஒரு கப் டீயின் விலை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே தி ரூபென்ஸ் என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் ஒரு கப் டீயின் விலை 200 டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாயாகும்.

காரணம் கோல்டன் டிப்ஸ் என்ற நிறுவனம் இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்கிறது. இந்த தேயிலையானது வெல்வெட் துணியில் உலர்த்தப்பட்டு இந்த ஓட்டலுக்காக பிரத்தேயகமாக அனுப்பப்படுகிறது. அதனால் தான் இந்த ஒரு கப் டீ விலை இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது.

குறிப்பாக இந்த ஓட்டலில் அமர்ந்தபடி அரண்மனையைப் பார்த்துக்கொண்டே வெள்ளிப் பாத்திரத்தில் டீ அருந்துவது அலாதியான ஒன்று என்று பலரும் தங்கள் அனுபவத்தைக் கூறி வருகின்றனர்.