உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் வைத்தியம் : எப்படி குடிக்கணும் தெரியுமா?

 

உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் வைத்தியம் : எப்படி குடிக்கணும் தெரியுமா?

உடல் எடை குறைப்பு என்பது தற்போதைய நிலையில் பலரின் கனவாகவே உள்ளது. அதிக உடல் எடை பல நோய்களை வரவழைக்கும். அதனால் தங்கள் அன்றாட வேலைகளை கூட பலரால் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் உடல் எடை குறித்து தான் பலரும் வருத்தப்படுகிறார்கள். உடலுழைப்பு இல்லாத மற்றும் தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் உள்ளிட்டவற்றால் உடல் பருமன் பலரையும் எளிதாக அடைந்து விடுகிறது.

உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் வைத்தியம் : எப்படி குடிக்கணும் தெரியுமா?

உடல் யை எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதே போல் உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். தேவையற்ற நேரத்தில் உணவு உண்பது , பாஸ்ட் புட் உணவு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். உடல் எடையை குறைக்க மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவது போல சிறந்த மருந்து சுடுதண்ணீரை குடிப்பதும் தான். தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரை குடித்தால் புளித்த ஏப்பம், வாய்வு பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். அதேபோல் வெந்நீரை தினமும் பருகும் போதும் உடலில் இருந்து வியர்வை அதிகமாகி நச்சுக்களும் வெளியேறும். இப்படி வெந்நீர் குடிப்பதால் பல பிரச்னைகள் தீரும்.

உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் வைத்தியம் : எப்படி குடிக்கணும் தெரியுமா?

அதேபோல் வெந்நீரை குடிப்பதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதாவது காலையில் நடைப்பயிற்சி செய்த பின் 350மிலி வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். பின்னர் காலை உணவு சாப்பிட அரைமணி நேரம் முன்பு மீண்டும் 350மிலி வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும். இதேபோல் காலை உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்துக்கு பிறகு 350மிலி வெதுவெதுப்பான தண்ணீரை மீண்டும் குடிக்க வேண்டும். இப்படி மதிய உணவுக்கு முன்பும், பின்பும் 350மிலி வெதுவெதுப்பான தண்ணீர், இரவு உணவுக்கு முன்பும், பின்பும் 350மிலி வெதுவெதுப்பான தண்ணீரை மீண்டும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் முழுவதும் தவறாமல் வெந்நீர் தெரப்பி எடுத்து வந்தால் உங்கள் எடை விரைவில் குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

உடல் எடையை குறைக்க சுடுதண்ணீர் வைத்தியம் : எப்படி குடிக்கணும் தெரியுமா?

உங்களுக்கு தினமும் வெந்நீர் குடிப்பது வெறுப்பாக இருந்தால் சீரகம் சிறிதளவு சேர்த்து அந்த நீரை குடித்து வரலாம். அதேபோல் எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்தும் அருந்தலாம். ஆனால் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளவர்கள் இதை பின்பற்றலாமா? என்று கேட்டால் அதை உறுதியாக சொல்ல இயலாது. மருத்துவரின் அறிவுரையை கேட்டபின்பு, ஹாட் வாட்டர் தெரபியை ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளவர்களும் பின்பற்றி கொள்ளலாம்.