ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே கண்டெய்னர் லாரியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொல்கத்தாவை சேர்ந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது

ஒசூர் அடுத்த சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் கடந்த மாதம் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களை தாக்கி, மர்மநபர்கள் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வடமாநில நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பரத் தேஜ்வாணி என்பவரை டெல்லியில் கைதுசெய்து தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில், கொள்ளையில் தொடர்புடைய அமீதாபா டட்டா என்ற மற்றொரு நபரை கொல்கத்தாவில் கைதுசெய்த தனிப்படை போலீசார், இன்று அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து, செல்போன் கொள்ளை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.