மகாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை ! விடுதி காப்பாளர், கருவை கலைக்க முயற்சித்த தாய், செவிலியரும் கைது !!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கட்டோல் கிராமத்தில் விடுதி காப்பாளர் மாற்றுத் திறனாளியான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்Lள்ளார்.
இதனால் கர்ப்பம் தரித்த அந்த சிறுமியை கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக பெண்ணின் தாய் மற்றும் ஒரு செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆறாம் வகுப்பு மாணவி, சிறுமி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹாஸ்டலில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் விடுதி காப்பாளர் ராஜேந்திர கல்பாண்டே என்பவரால் பலமுறை பாலியல் பலாத்காரம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார்.

representative image

இந்த விஷயம் அறிந்த சிந்து என்று அடையாளம் காணப்பட்ட ஒரு செவிலியர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தாயார் கருக்கலைப்பு செய்யும்படி அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி உள்ளனர். பின்னர் இந்த தகவல் ஒருவழியாக போலீசார் காதுகளுக்கு எட்டியது. தகவல் அறிந்து வந்த போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Most Popular

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...

கேரளாவில் விமான விபத்து : அவரச உதவி எண்கள் அறிவிப்பு!

துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது நேற்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17...

கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியர்களை கேரளா அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி...