நிர்வாகத் திறமையற்ற பழனிசாமி அரசால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! – டி.டி.வி.தினகரன் தாக்கு

 

நிர்வாகத் திறமையற்ற பழனிசாமி அரசால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! – டி.டி.வி.தினகரன் தாக்கு

நிர்வாகத் திறமையற்ற பழனிசாமி அரசால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! – டி.டி.வி.தினகரன் தாக்கு
முதலமைச்சர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னை மாநகரத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொண்டு சமாளித்து உரிய சிகிச்சை வசதிகளை அளிக்க வேண்டிய தமிழக அரசு, முதலமைச்சர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் திணறி வருகிறது. அதன் காரணமாக நோயாளிகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்கு உரியதாகும்.

நிர்வாகத் திறமையற்ற பழனிசாமி அரசால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! – டி.டி.வி.தினகரன் தாக்குகொரோனா நோய்த் தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற பல திட்டங்களை வைத்திருக்கிறோம்… ஒவ்வொன்றாக அமல்படுத்தி நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் பழனிசாமியும் சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் வீரவசனம் பேசி பேட்டிகளைக் கொடுக்கிறார்களே தவிர அதை செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.
நேற்றுவரை சென்னை மாநகர பகுதிகளில் மட்டும் 14,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 129 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 66 சதவீதம் பேர் சென்னைவாசிகள். மரணம் அடைபவர்களின் நான்கில் ஒருவர் சென்னைவாசி. நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவு என்று நாள்தோறும் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர். தமிழகத்தில் இதுவரை 173 உயிர்களை நோய்க்காக பறிகொடுத்துவிட்டு இப்படி பெருமைப்பட்டுக் கொள்வது மனிதத்தன்மை உள்ள செயல்தானா? தமிழகத்தில் ஒரு உயிர்கூட கொரோனாவுக்காக பலியாக விடமாட்டோம் என்று வசனம் பேசியதெல்லாம் என்னவாயிற்று?

நிர்வாகத் திறமையற்ற பழனிசாமி அரசால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! – டி.டி.வி.தினகரன் தாக்குசென்னையில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 300 முதல் 600 நோயாளிகள் வரை மட்டுமே சிகிச்சை அளிக்க படுக்கை வசதி உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் சுமார் 7000 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இனி வரப்போகிற நோயாளிகளுக்கு அரசு என்ன ஏற்பாடுகளை செய்து இருக்கிறது? கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. எனவேதான் ஏதேதோ காரணங்களைச் சொல்லி நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் ஏற்படும் சங்கடங்களை நம்மால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் தான் இந்நோயின் தாக்கம் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து தமிழக அரசு நினைவில் வைத்திருந்தால் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்நேரம் எடுத்திருப்பார்கள். சென்னையில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் உள்ள அரங்கங்களை மாநகராட்சி கைப்பற்றிப் பல வாரங்கள் ஆகிவிட்டது. அதில் குறைந்த பட்சம் படுக்கை வசதி ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லையே ஏன்?
நோய் பரவத் தொடங்கிய காலங்களில் அரசு தினசரி வெளியிடும் மருத்துவ குறிப்பில் எவ்வளவு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று சொல்லி வந்தார்கள். கடந்த பல வாரங்களாக அந்த விவரத்தை சொல்வதையே தவிர்ப்பதன் காரணம் என்ன?
பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையால் நொந்துபோய் தனியார் மருத்துவமனைகளை நாடுபவர்களுக்கு அங்கேயும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 25ஆயிரம் முதல் ஒருலட்சம் வரை கட்டணம் வசூலித்து ஒரு பகல்கொள்ளையே நடத்துகின்றன.அதைத்தடுக்க வேண்டிய அரசு பேரிடர்கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன?
இப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் எவற்றுக்கும் பதில்சொல்லும் மனநிலை தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானது. இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, நோய்த்தொற்று அதிகரித்துவருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும்.
சென்னை மாநகரில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் எந்தெந்தப் பகுதிகளில் சிகிச்சை பெற எவ்வளவு வசதிகள் உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.